ராகுல்காந்தி பிரபலப்படுத்திய கயிற்றுக் கட்டிலின் கதை

த்திரப்பிரதேச மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவரும் ராகுல்காந்தி “கட்டில் சபை” என்ற ஒரு வித்தியாசமான பிரச்சார வியூகத்தை தொடங்கியுள்ளார். ராகுல்காந்தி கிராமங்களில் பயன்படுத்தும் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து பேசுவார், அதை பொதுமக்கள் கிட்டத்தட்ட 4000 கட்டில்களில் அமர்ந்து கேட்பார்கள்.

உ.பி மாநிலங்களின் கிராமங்களில் மக்கள் வீடுகளின் முன்னால் கயற்றுக் கட்டிலைப் போட்டு அமர்ந்து பேசுவது வழக்கம். எனவே அவர்களை ஈர்க்கும் வகையில் ராகுல் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளார்.

40921-vrsoqhpnul-1473259418

இந்த கயிற்றுக் கட்டிலின் வரலாறு சுவையானது. இது எப்போது யாரால் முதன்முதலில் உருவாக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கி.பி 1350-இல் முகமது பின் துக்ளக்கின் காலத்தில் இந்தியாவுக்கு வந்த மொராக்கோ நாட்டுப் பயணி இபின் பதூதா இந்தக் கயற்றுக்கட்டிலைப் பற்றி வியந்து எழுதியுள்ளார். தமிழில் “கட்டில்” என்ற வார்த்தை இந்தியில்  khāṭ  என்றி திரிந்து அதுவே ஆங்கிலத்தில் Cot என்று அழைக்கப்படலாயிற்று. இந்த உதாரணமே கட்டிலின் பிறப்பிடம் எது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியென உணர்த்தும்.

இன்னும் கிராமங்களில் நமது தாத்தா பாட்டி வீட்டில் இந்தக் கயிற்றுக் கட்டில்களைப் பார்க்கலாம். உ.பி போன்ற வட மாநிலங்களில் இந்தக் கயிற்றுக்கட்டில் மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்தது. பிறப்பிலிருந்து இறப்புவரை  மனிதரோடு இக்கட்டில்களின் பயணமும் தொடரும்.

nmmasccbop-1473259205

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கட்டில் கிடைத்தால் விடுவார்களா மக்கள்? ராகுலின் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டில்களை கூட்டம் முடிந்தவுடன் அடுத்த கிராமத்துக்கு கொண்டு செல்ல தேடியபோது அவற்றில் முக்கால்வாசியைக் காணவில்லையாம். விசாரித்துப் பார்த்ததில் மக்கள் அவரவர் வீடுகளில் கட்டில்சபை நடத்த அவற்றை கொண்டுபோய் விட்டதாகத் தெரிகிறது. அரசியல் கட்சிகளிடமிருந்து இப்படி எதையாவது ஆட்டையைப் போட்டால்தான் உண்டு என்று நினைத்தார்களோ என்னவோ? ஆனால் இனி ராகுல் கட்டில் சபையை தொடர்வாரா என்பதுதான் தெரியவில்லை.

(நன்றி: http://scroll.in/)