சேலம்,

சேலம் அருகே உள்ள வாழப்பாடி அருகே விவசாயி மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். தண்ணீரின்றி பருத்தி பயிர் கருகியதை கண்டு வேதனையடைந்த விவசாயி மயங்கி விழுந்து மரணத்தை தழுவினார்.

தமிழகம் முழுவதும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்து உள்ளனர். இதில் பலர் அதிர்ச்சியாலும், தற்கொலையாலும் பலியாகி உள்ளனர்.

பருவமழை பொய்த்து போனதால் விவசாயத்திற்கு போதிய தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து போயின. இதை காணும் விவசாயிகள் வேதனையால் துடித்து மரணமடைகின்றனர்.

வாழப்பாடியை அடுத்த சந்திரபிள்ளைவலசு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பருத்தி பயிரிட்டு இருந்தார். தற்போது தமிழகத்தில் நிலவும்  கடும் வறட்சி காரணமாக பருத்தி செடிகள் காய்ந்து கருகி போனது.

இதை கண்ட விவசாயி குணசேகரன் கடும் மன அழுத்தத்துக்கு ஆளானார். வேதனையில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை எழுப்பியதுபோதுதான் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.