சென்னை

புளூவேல் விளையாட்டினால் இரு மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக வந்த தகவலையொட்டி சென்னையில் பல பள்ளிகளில் மாணர்வகளுக்கு ஆலோசனை வகுப்புகள் நடத்துகின்றன.

புளூவேல் சாலஞ்ச் என்னும் அபாயகரமான விளையாட்டில் 50 சோதனைகள் உள்ளன.  விளையாடுபவர்கள் ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும்.   அதில் சில சோதனைகள் தற்கொலைக்கு தூண்டுவதாக உள்ளதாக சொல்லப்படுகின்றன.   அதை விளையாடிய மாணவர்களில் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டதாகவும்,  ஒரு மாணவி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும்  செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து சி பி எஸ் சி ஒரு சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது.   அந்த சுற்றறிக்கையில் மாணவர்களின் இண்டர்நெட் பயன்பாட்டை,  பள்ளி வளாகம், பள்ளி வாகனக்கள், வகுப்பறைகள் போன்ற இடங்களில் ஃபயர்வால் நிறுவி கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து இந்த விளையாட்டை மாணவர்கள் விளாயாடுவதை தடுக்க சென்னைப் பள்ளிகளில் ஆலோசனைகள் தரப்பட்டு வருகின்றன.    அவைகளில் காரப்பாக்கத்திலுள்ள இந்துஸ்தான் இண்டர்நேஷனல் பள்ளியும் ஒன்று.   அதன் முதல்வர் ஐரிஸ் தியோடர், “எங்கள் பள்ளியில் ஒரு மாணவர் இந்த விளையாட்டை விளையாடுவதாக வந்த வதந்தியை ஒட்டி நாங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இதில் உள்ள தீமைகளைப் பற்றி ஆலோசனை வழங்குகிறோம்.   பெற்றோர் இதனால் பீதி அடையாமல், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து இந்த விளையாட்டினுள் நுழையாமல் பார்த்துக் கொண்டாலே போதுமானது” எனக் கூறினார்.

அதே போல வேளச்சேரியில் உள்ள டி ஏ வி பள்ளியின் முதல்வர் மினூ அகர்வால் தங்கள் பள்ளியிலும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் விளையாட்டுகளைப் பற்றி ஆலோசனை அளித்து அவர்கள் அதை விளையாடச் செய்யாமல் தடுத்து வருவதாகவும் கூறினார்.

பள்ளி மாணவர்கள் தற்கொலை ஒருபுறம் இருக்க,  முதுகலை படிக்கும் 24 வயது மாணவி ஒருவர் விருகம்பாக்கத்தில் இதே விளையாட்டின் தாக்கத்தினால் ஏழாம் மாடியில் இருந்து குதித்து அபாய கட்டத்தில் இருப்பது ஏற்கனவே சென்னை விருகம்பாக்கத்தில் நடந்துள்ளது