Random image

ரூ.9,100 கோடி மதிப்பில் ராணுவ தளவாட பொருட்கள் வாங்க முடிவு

டில்லி:

ராணுவத்துக்கு ரூ.9,100 கோடி மதிப்பில் தளவாட பொருட்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் ரூ. 9,100 கோடி மதிப்பு ராணுவத்தின் பல்வேறு நிலைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ராணுவத்தின் 2 பிரிவுக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.