மருத்துவப் படிப்புக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது…:!
சென்னை:
மருத்துவப் படிப்புக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கி உள்ள நிலையில், இன்று பொதுப்பிரிவுக் கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நேற்று மருத்துவப் படிப்புக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு வரும் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இன்றைய கலந்தாய்வுக்கு 597 மாணவ – மாணவியர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வில் பங்கு பெற்று தமிழக மருத்துவக்கல்லூரிகளை தேர்வு செய்த ( 2வது இடம் முதல் 11வது இடம் வரை) 10 பேருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். அவருடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இருந்தார். இன்றைய கலந்தாய்வில் பங்குபெற்ற முதல் பேருமே சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 70 சதவிகித இடங்களும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 30 சதவிகித இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.