7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஏற்கனவே இது குறித்து தெளிவான அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆகையால் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

மத்திய அரசால் தேசிய அளவில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டாலும், தமிழகத்தில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பின்னரே கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.