சென்னை:

பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 27 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது.

ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து திங்களன்று காலை 6.27 மணிக்கு ஏவப்படும் எமிசாட் சாட்டிலைட், 3 கோள்களில் ஒரே நேரத்தில் ஆய்வு செய்யும். அதேபோல் விண்வெளி ஆராய்ச்சிலும் ஈடுபடுவது இது முதல் முறையாகும்.

இரண்டாவது ராக்கெட் காலை 9.27 மணிக்கு விண்ணில் ஏவப்படும். 2008-ல் சந்திராயன் மற்றும் 2013-ல் செவ்வாய் கிரகத்துக்கான மிஷனுக்கு பிஎஸ்எல்வி பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மின்காந்த அலைகளை ஏற்படுத்துவதே இந்த சாட்டிலைட்டின் முக்கிய பணி. எமிசாட் சாட்டிலைட்டுடன் 28 நானோ சாட்டிலைட்களும் இணைக்கப்பட்டுள்ளன.