சிறப்பு பூஜையில் எடியூரப்பா

பெங்களூரு:

ன்று கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற வேண்டி, காங்கிரஸ் கட்சியினர், பாஜக, ஜனதாதளம்  சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

கர்நாடக பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடியூரப்பா, இன்று அதிகாலையிலேயே அருகிலுள்ள கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். அப்போது தேர்தலில் பாஜக வெற்றிபெற வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

சிறப்பு பூஜையில் குமாரசாமி

அதேபோல மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி.குமாரசாமி  ஆதிச்சநாகிரி மகாசமாஸ்தான மடத்திற்கு தனது குடும்பத்தினருடன்  சென்று சிறப்பு பூஜை மேற்கொண்டார். குமாரசாமி ரமணகரா, சன்னப்ட்னா தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

அதுபோல முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து பதாமி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு தனது வெற்றிக்காக காலையிலேயே பூஜை புனஸ்காரங்களை தொடங்கி உள்ளார்.

சிறப்பு பூஜையில் ஸ்ரீராமுலு

இவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறக்கோரி டில்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே  காங்கிரஸ் தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.

சிறப்பு பூஜையில் காங். தொண்டர்கள்