இலங்கையில் சுங்க அதிகாரிகளை தாக்கிய தம்பதி கைது

கொழும்பு:

குவைத்தை சேர்ந்த தம்பதி தங்களது வளர்ப்பு பிராணியான நாயுடன் கொழும்பு விமானநிலையம் வந்து இறங்கினர். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேறும் போது சுங்க அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் 5 அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் தம்பதியர் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஜாமினில் விடுவித்த மாவட்ட நீதிமன்றம் இருவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இருவரும் தனித்தனியாக தங்கள் மீதான விசாரணையை சந்திக்க வேண்டும் நீதிபதி உத்தரவிட்டார்.

கார்ட்டூன் கேலரி