மெட்ரோ ரெயிலில் பயணிகள் முன்னிலையில் கட்டிப்பிடித்துக்கொண்ட காதல் ஜோடிக்கு அடி உதை

உதைபடும் காதல்ஜோடி

கொல்கத்தா:

கொல்கத்தா மெட்ரோ ரெயிலில்  பயணத்தின்போது ஒரு ஜோடி கட்டிப்பிடித்துக்கொண்டு காதல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது. இதை கண்ட சக பயணிகள் அந்த காதல் ஜோடியை சரமாரியாக அடித்து உதைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் காதல்ஜோடிக்கு ஆதரவாக சில கல்லூரி மாணவர்கள்  ரெயில் நிலையத்தில் பிரி ஹக் என்று கூறி கட்டிப்புடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்காத்தாவின் டும் டும் ரயில் நிலையம் பகுதியில் ஓடும் ரெயிலில் காதல் ஜோடி ஒன்று கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. இதை கண்ட அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள், காதல் ஜோடியின் அத்துமீறிய செயலைக்கண்டு, அவர்களை துவைத்து எடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றனர்.

காதலர்களுக்கு ஆதரவாக போராட்டம்

இந்நிலையில், காதல் ஜோடி தாக்கப்பட்டதற்கு  எதிர்ப்பு தெரிவித்து டம்டம் ரயில் நிலையத்தில் திரண்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் ‘ஃப்ரீ ஹக்ஸ்’ என்ற போராட்டத்தை நடத்தினர். கட்டிப்பிடிப்பது என்பது அநாகரீகமான செயல் இல்லை என்றும், இது அன்பின் வெளிப்பாடும் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.