Random image

பிரபல ‘டைம்’ இதழை ரூ.1,375 கோடிக்கு வாங்கிய தம்பதி

வாஷிங்டன்:

பிரபல டைம் வார இதழை செல்வந்த தம்பதியர் ரூ.1,375 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

உலகளவில் புகழ்பெற்ற பெற்ற டைம் வார இதழ் 95 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுது. இந்த நிறுவனத்தை சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான மார்க் பேனியாபும், அவரது மனைவியும் இணைந்து 19 கோடி டாலர்களுக்கு (அதாவது ரூ.1,375 கோடி) மெர்டித் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளனர்.

‘‘டைம் பத்திரிக்கையை வாங்கியதற்கும் சேல்ஸ்போர் நிறுவனத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை. பேனியாபும் அவரது மனைவியும் தனிநபர்கள் என்ற முறையிலேயே டைம் இதழ் வாங்கப்பட்டுள்ளது.

பத்திரிகையை வாங்கினாலும், டைம் பத்திரிக்கையின் அன்றாட நடவடிக்கைகளிலோ இதழியல் சார்ந்த முடிவுகளிலோ பேனியாப் தலையிட மாட்டார். தற்போதுள்ள நிர்வாகத் தலைமைக் குழுவே மேற்கொள்ளும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.