கோவை பூங்கா : திருமண சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி!

கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் உள்ள தாவரவியல் பூங்காவில் திருமண சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஜோடிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்

தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் பூங்கா கோவையில் மருதமலை ரோட்டில் அமைந்துள்ளது.   இங்கு பொழுது போக்க பல காதல் ஜோடிகள் வருவது வழக்கம்.   இதை தடுக்க  பூங்காவின் நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதை ஒட்டி தற்போது பூங்காவின் பாதுகாவலர்கள் அங்கு வரும் ஜோடிகளிடம் திருமண சான்றிதழைக் கேட்கிறார்கள்.   சான்றிதழ் இல்லாதவர்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை.

இது குறித்து காவலர்கள், “நாங்கள் ஆதார் அடையாளங்கள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை மட்டுமே முதலில் கேட்டு வந்தோம் ஆனால் அதனால் ஒன்றும் பிரயோசனம் இல்லை

தற்போது தாலியுடன் வருபவர்கள், குடும்பத்துடன் வருபவர்களைத் தவிர மற்றவர்களிடம் திருமண சான்றிதழ்களைக் கேட்கிறோம்.   அதை காட்டாதவர்களை அனுமதிப்பது இல்லை.

அதே நேரத்தில் கூட்டமாக வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பூங்காவிற்குள் அனுமதிக்கிறோம்”  எனத் தெரிவித்துள்ளனர்.