உலக அளவில் முன்னணி வகிக்கும் படிப்பு எது?  : ‘கோர்ஸ் இரா’ நிறுவனம்  அறிவிப்பு 

உலக அளவில் தொழில்நுட்பம் பயில்கிறவர்களில் அதிகமானோர் தமிழ்நாட்டில் இருந்து வரும் மாணவர்கள் என, “கோர்ஸ் இரா” நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘கோர்ஸ் இரா’ ஆன்லைனில் மேல்படிப்பு படிக்க உதவும் ஒரு தளம். 2018-ல் எந்த மேல்படிப்புகள் அதிகம் பேரால் படிக்கப்பட்டது, எந்த படிப்புக்கு தேவையிருக்கிறது என ஒரு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் இருந்துதான் அதிகம் மாணவர்கள் மேல்படிப்பு படிக்க வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. மாணவர்கள்  த்ய்ஹொதொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளையே அதிகம் படிக்க விரும்புகின்றனர்.   80 சதவீத படிப்புகள் தொழில்நுட்பம் சார்ந்த  படிப்பில் தான் உள்ளது என்றும் அதில் 10 சிறந்த ‘கோர்ஸை’ கோர்ஸ் இரா வெளியிட்டுள்ளது. அதில் ‘ஆர்ட்டிஃபிஸியல் இண்டலிஜென்ஸ்’ மற்றும் ’பைதான் புரகிராமிங்’ ஆகிய படிப்புகள் முதலிடத்தில் உள்ளன.

இந்த படிப்புகளைப் படிக்க இந்தியாவில் இருந்து உலகின் முன்னணி கல்வி நிறுவனக்களுக்கு ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த மானவர்களதிகளவில் வருவதாகத் தெரிவித்துள்ளது. அதில் மகாராஷ்ட்ரா முதலிடத்திலும் அடுத்து கர்நாடக, டெல்லி, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

2019-லிலும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளே முதன்மையான இடைத்த்தைப் பிடிக்கும் என  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.