‘கே.ஜி.எப் 2’ படப்பிடிப்பிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை…!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான கே.ஜி.எப் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கபபடுவதாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.