நீதிமன்ற வழக்குகள் விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: உச்சநீதி மன்றம்

டில்லி :

ச்சநீதி மன்றத்தில் நடைபெறும்  வழக்குகள் விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என உச்சநீதி மன்றம் கூறி உள்ளது.

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணை மற்றும் சட்டமன்றங் களில் நடைபெற்று வரும் விவாதங்கள், பணி நியமன நேர்காணல் போன்றவை களை  நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருன்றனர்.

இந்த நிலையில், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், விசாரணை நீதிமன்றங் களில் நடைபெறும் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

இவ்வாறு நேரடிய ஒளிபரப்பு செய்வதன் காரணமாக, விசாரணை குறித்து  கிராமப்புற மக்களும்  அறிந்து கொள்ள முடியும் என்று நீதிமன்ற செயல்பாடுகள், வழக்கு விசாரணைகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் உச்சநீதி மன்றம் தெரிவித்து உளளது.

உச்சநீதி மன்றத்தின்  இந்த உத்தரவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில்,  நேரடி ஒளிபரப்பிற்கான வழிகாட்டு நெரிமுறைகளை உருவாக்கி, வரும் (ஜூலை) 23 ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசின்  அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் தெரிவித்து உள்ளது.