விஜய் டிவி மீது பக்ரீத் தயாரிப்பாளர் முருகராஜ் வழக்கு….!

விக்ராந்த நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் “பக்ரீத்” இப்படம் நேற்று முன் தினம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், யூடியூப்பில் பக்ரீத் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் முடக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் முருகராஜ் ஸ்டார் மியூசிக் நிறுவனத்திடம் இப்படத்தின் டீசர், பாடல்களை வெளியிடும் உரிமையை கொடுத்துள்ளோம் , படம் வெளியான நாளில், நள்ளிரவு 1 மணியளவில் இதன் டீசர் மற்றும் பாடல்கள் ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) முடக்கியது. காரணம் கேட்டதற்கு தவறுதலாக அப்படி நடந்துவிட்டது என்று சாதாரணமாக கூறிவிட்டார்கள்.

ஏறக்குறைய 20 மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி இருந்ததால் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டிஸும் அனுப்பி இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bakrid, blocked, COURT NOTICE, murugaraj, vijay tv, Vikranth
-=-