ண்டன்

பிரிட்டன் பாராளுமன்றத்தைப் பிரதமர் போர்ஸ் ஜான்சன் முடக்கியது சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐரோப்பியக் கூட்டுறவில் இருந்து விலக பிரிட்டன் அரசு தீர்மானம் செய்தது.   அப்போதைய பிரிட்டன் பிரதமரான தெரசா மே அளித்த இந்த தீர்மானத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது.  அதையொட்டி அவர் நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்  தீர்மானம் இரு அவைகளிலும் தோல்வி அடைந்ததால் அவர் பதவி விலக நேரிட்டது.

அதன் பிறகு பிரதமராக பதவி ஏற்ற போரிஸ் ஜான்சனும் ஐரோப்பியக் கூட்டுறவில்  இருந்து வெளியேறும் முடிவில் தீவிரம் காட்டி வந்தார்.  அதனால் இவரை எதிர்த்து இவருடைய உறவினரே பதவி விலகியதால் போரிஸ் ஜான்சன் அரசு பெரும்பான்மையை இழந்தது.  அதனால் பாராளுமன்றத்தை முடக்க போரிஸ் ஜான்சன் முடிவு எடுத்தார்.

அவர் முடிவை இங்கிலாந்து ராணி எலிசபெத் க்கு அனுப்பி வைத்தார்.  இங்கிலாந்து ராணி எலிசபெத் பிரிட்டன் பாராளுமன்றத்தை வரும் அக்டோபர் 15 வரை முடக்க ஒப்புதல்  அளித்தார்.  போரிஸ் ஜான்சனின் பாராளுமன்ற முடக்கம் முடிவை எதிர்த்து பிரிட்டன் அரசியல் தலைவர்கள் ஸ்காட்லாந்து உச்சநீதிமன்றத்தில் வழகு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் போரிஸ் ஜான்சனின் பாராளுமன்ற முடக்கம் என்பது சட்டவிரோதமானது எனவும் அது ஒருதலைப் பட்சமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு எனவும் தெரிவித்துள்ளது.    இந்த முடிவை பிரதமர் ஜான்சன் இங்கிலாந்து ராணி எலிசபெத் இடம் தெரிவித்து ஆலோசனை கேட்டது சட்டத்துக்குப் புறம்பானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பின் முழு வடிவம் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது.