செக் மோசடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜராக உத்தரவு….!

அண்மைக்காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து சமூகவலைத்தளத்தில் எழுதி வருபவர் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்,

கடந்த 2014ஆம் ஆண்டு உன் சமையலறையில் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்தப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்து தயாரிப்பாளர் ஆனார் .
இந்நிலையில் திரைப்படத்திற்காக பைனான்சியர் அக்ஷய் என்பவரிடம் 5 கோடி வாங்கிய பிரகாஷ் ராஜ் ரூ.5 கோடிக்கான காசோலையை சம்மந்தப்பட்ட பைனான்சியரிடம் வழங்கியுள்ளார். ஆனால் போதிய பணமில்லை என காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது.

இதனால் பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி இதுகுறித்து பிரகாஷ் ராஜுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம் ஏப்ரல் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

You may have missed