கணவனுக்கு ஜீவனாம்சம் : மனைவியை அதிர வைத்த அதிரடி தீர்ப்பு…

கணவனுக்கு ஜீவனாம்சம் : மனைவியை அதிர வைத்த அதிரடி தீர்ப்பு…
கணவனிடம்,  ஜீவனாம்சம் கேட்டு  மனைவியர் நீதிமன்றத்தை நாடுவது வழக்கம்.
ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், மனைவி ஜீவனாம்சம் தரவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்து  வெற்றியும் பெற்றுள்ளார்.
அங்குள்ள முசாபர்நகர்  குடும்பநல நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கு தொடர்ந்த முதியவர், மனைவியைப் பல ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கிறார்.
அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவரது  மனைவிக்கு  மாதாமாதம் 12 ஆயிரம் ரூபாய் ‘பென்ஷன்’ வருகிறது.
இந்த நிலையில், கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தும் தனக்கு, பராமரிப்பு செலவுக்குத் தனது மனைவி பணம் தரவேண்டும் என அந்த கணவர், முசாபர்நகர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், முதியவருக்கு மாதம் தோறும் பராமரிப்பு செலவாக  2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஓய்வு பெற்ற பெண் அரசு ஊழியருக்கு உத்தரவிட்டது.
பா.பாரதி.