களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை…!

 

2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “களவாணி” திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது.

இந்த படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘களவாணி 2 ‘ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீதனலட்சுமி நிறுவனத்தின் உரிமையாளர் குமரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.