WOMAN TMEPLE ENTRY
சமீபத்தில், போலீஸ் மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள், கருவறைக்குள் பெண்களை அனுமதிக்காத ஷனி ஷிங்னாபூர் கோவிலில்  த்ருப்தி தேசாய் நுழைவதையும் தடுத்து நிறுத்தினர்.
WOMAN TEMPLE TRUPTI DESAAI CHIEF OF RANRAGINI BRIGADE
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
நூற்றாண்டுகள் பழமையான மரபுகள் காட்டி மகாராஷ்டிராவிலுள்ள கோயில்கள் இனி கோயிலில் பெண்கள் நுழைவதைத் தடை செய்ய முடியாது. மும்பை உயர் நீதிமன்றம், “கோவிலில் பிரார்த்தனை செய்வது பெண்களின் அடிப்படை உரிமை அதை பாதுகாப்பது அரசாங்கத்தின் அடிப்படை கடமை” என்று இன்று தீர்ப்பளித்தது.  இந்த சட்டத்தை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், அதை மீறுவோருக்கு, அதவது கோவிலில் நுழைபவரை தடுப்பவர்க்கு ஆறு மாதங்கள்  சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
WOMEN TEMPLE ENTRY 3
“இது அனைத்துப் பெண்களுக்கும் அரசியலமைப்பிற்கும் கிடைத்த வெற்றி,” என்றும், அகமத் நகர் மாவட்டத்திலுள்ள பிரபலமான ஷானி அல்லது சனி பகவான் கோவிலில் நாளை பிரார்த்தனை செய்யப் போவதாகவும் ஆர்வலர் த்ருப்தி தேசாய் உறுதியளித்து கூறினார்.
“இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மதம், எப்போதும் பெண்களுக்கு வணங்குவதற்குரிய உரிமையை கொடுத்துள்ளது” எனக் கூறி முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் .ஆனால், மாநில சட்டங்கள் பெண்களுக்கு கோவிலுக்குள் நுழையும் சம உரிமையை கொடுக்க வேண்டுமென்று கூறினாலும், ஆண்கள் நுழைவதற்கு அனுமதியில்லாத கோவிலின் சில பகுதிகளுக்கு பெண்களுக்கு அனுமதிவழங்க வேண்டும் என்று கோயில்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று அரசாங்கம் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
“ஒரு முக்கிய தீர்ப்பை நீதிமன்றம் கூறியயுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் ஆண்களும் பெண்களும்  சமமாக நடத்தப்பட வேண்டும்,” என்று ஷாய்னா என் சி என்ற கட்சி செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். கடந்த ஆண்டு, ஒரு பெண் பக்தை ஷானி ஷிங்க்னாபூர் கோவிலில் பிரார்த்தனை செய்தார், அவர் சென்றப் பின்னர் உடனடியாக ஒரு விரிவான தீட்டுக் கழிக்கும் சடங்கை பூசாரி நடத்தினார்.
WOMEN 3
 
கேரளாவில் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவிலில் இனப்பெருக்க வயதிற்குட்பட்ட பெண்கள் மீதான தடையை நீக்குவதற்காக உச்ச நீதிமன்றம் திட்டமிட்டு வருகிறது. WOMAN SABARIMALA