10வயது சிறுமியின் கருவை கலைக்க கோர்ட்டு மறுப்பு!

ஹரியானா,

றவினரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சிறுமியின் கருவை கலைக்க ஹரியானா நீதிமன்றம் மறுத்துள்ளது.

சிறுமியின் வயிற்றில் உள்ள குழந்தையின் கரு 6 மாதமான நிலையில், கருவை கலைத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி கருவை கலைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உறவினரால் ஆசை வார்த்தை கூறி பாலியல் வண்புணர்வுக்கு ஆனான சிறுமியின் வயிற்றில் குழந்தை உருவானது. ஆரம்பத்தில் இதை அரியாத அந்த சிறுமி, வயிறு பெரியாவதை உணர்ந்த உறவினர்கள் சிறுமியிடம் விசாரித்த போது, இதற்கு காரணம் அந்த சிறுமியின் உறவினர் என தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியை பலாத்காரப்படுத்திய அந்த நபர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க நீதிமன்றத்தை நாடினர்.

ஆனால், நீதிமன்றம் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டது. அதையடுத்து, மருத்துவர்களின் ஆலோ சனைப்படி கருவை கலைக்க மறுத்து தெரிவித்து, சிறுமிக்கு தகுந்த மருத்துவ பரிசோதனை செய்யவும், பாதுகாக்கவும் உத்தரவிட்டது.

ஏற்கனவே இம்மாதிரியான வழக்கு ஒன்றில், வளர்ப்புத் தந்தையால் பாலியல் வன்புணர்வுக்கு  ஆளானதாகக் கூறப்பட்ட, ஐந்து மாதம் கருவுற்றிருந்த சிறுமிக்கு  கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.