சென்னை:

மிழகத்தில் நீதிமன்றங்களை திறக்கக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுஉள்ளது. இதற்கிடையில் மே மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால்,  பெரும்பாலான நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சில மாவட்ட நீதிமன்றங்களும், சென்னை உயர்நீதி மன்றமும் செயல்பட்டு வருகிறது. அவசர வழக்குகள் நீதிபதிகள் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக அனைத்து ஊர்களிலும் உள்ள வக்கீல்களின் சட்ட அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் இளம் வக்கீல்கள்  உள்பட நீதித்துறையைச் சார்ந்துள்ளோர் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து, நீதிமன்றங்களை திறக்கக்கோரி,   தமிழ்நாடு பார்கவுன்சில் முன்பாக ஜனநாயக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறும் வழக்கறிஞர்கள்,  நீதிமன்றங்களை திறக்கக்கோரியும், நிவாரணம் வழங்ககோரியும் முழக்கமிட்டு வருகின்றனர்.