டில்லி

பாரத் பயோடெக் உடன் ஐ சி எம் ஆர் இணைந்து உருவாக்கி உள்ள கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகைக் கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது,   கொரோனா தடுப்பூசிகள் கண்டறியும் பணியில்  பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.,   அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளிக்கப்பட்டு மக்களுக்குப் போடப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு (ஐ சி எம் ஆர்) இணைந்து கோவாக்சின் என்னும் தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.  தற்போது இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித உடலில் செலுத்தும் பரிசோதனையில் உள்ளது.  இந்த சோதனையில் சுமார் 26000 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த தடுப்பூசி சோதனையின் முதல் கட்ட சோதனி முடிவுகள் வெளியாகி உள்ளன.  அதன்படி இந்த கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகவும் ஐ சி எம் ஆர் அறிவித்துள்ளது.  மேலும் இந்த தடுப்பூசி பக்கவிளைவுகளை அளிக்கவில்லை எனவும் 2 முதல் 8 டிகிரி வெப்ப நிலையில் வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.