டெல்லி: தீவிர கொரோனா நோயாளிகளுக்கு கோவோக்சின் தடுப்பூசி 78%  பலன் அளிப்பதாக பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா தொற்றுபரவலை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில், அரசு நிறுவனமான தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த,  பாரத் பயோடெக்  கோவாக்சின் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசி தயாரித்து வருகிறது. ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ கவுன்சில்) வழிகாட்டுதலுடன் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின், தயாரிப்பான கோவிஷீல்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில்,கோவிஷீல்டு 3வது கட்ட சோதனை ஏற்கனவே வெளியான நிலையில், அதன்மூலம் 70 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை பயன் தரும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கோவாக்சின் 3வது சோதனை வெளியாகாத நிலையில், தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 1ந்தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், கோவாக்சின் தடுப்பூசி தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு 100% பலன் அளிப்பதாக இடைக்கால அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 78% அளிப்பதாகவும் பரிசோதனையின் முடிவு தெரியவந்துள்ளது.

மேலும்இ, சார்ஸ் – கோவி 2 உள்பட இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் கோவாக்சின் தடுப்பூசிக்கு உள்ளதாகவும் ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கோவோக்சின்  தடுப்பூசியின் முதல் மற்றும் 2வது டோஸை போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.