செப்டம்பரில் நடைபெற உள்ள COVAXIN இரண்டாம் கட்ட சோதனைகள்

இந்தியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, கோவாக்சின், ஏற்கனவே முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகளில் வெற்றிகரமான முடிவுகளைக் காட்டியுள்ளது. இப்போது, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு, கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் (ஜி.எம்.சி.எச்) பரிசோதனைத் தளங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அஸ்ஸாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த கொரோனா வைரஸுக்கு ஒரு சிறந்த தடுப்பு ஹு ஒன்றைத் தயாரிக்க அஸ்ஸாம் ஒரு முக்கிய பங்கைக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார். “கோவாக்சினின் முதற்கட்ட மருத்துவ சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கான மையங்களில் ஒன்றாக ஜிஎம்சிஎச்-ஐ உருவாக்குவதற்கான முறைகளைப் பாரத் பயோடெக் மற்றும் ஐசிஎம்ஆர் தொடங்கியுள்ளதாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ” என்று சர்மா கூறினார். கோவாக்சினுக்கான இரண்டாம் கட்ட சோதனைகள் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான தகவல் தொடர்புகள் நடந்து கொண்டிருக்கின்றன, மேலும் ஜிஎம்சிஎச் 2 ஆம் கட்ட பரிசோதனையில் பங்கேற்க 99 சதவீத வாய்ப்பு உள்ளது, அது நடந்தால், தடுப்பூசி தயாரிப்பதில் அஸ்ஸாமுக்கும் ஒரு பங்கு இருக்கும்” என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

பல நாடுகள் தங்கள் தடுப்பு மருந்துகளைத் தயார் செய்து வருவதால், தடுப்பூசி தயாரிக்கும் செயல்முறை உலகம் முழுவதும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு பயனுள்ள உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து – ஸ்பூட்னிக் வி – யைப் பதிவு செய்த முதல் நாடாக ரஷ்யா உள்ளது.