பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 2 காங். எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சில நாட்களுக்கு முன்பு மாண்டியா எம்.பி.யும், நடிகையுமான சுமலதா அம்பரீஷுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினரும், உதவியாளரின் குடும்பத்தினரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
குனிகல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரங்கநாத், அவரது உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த சிவாஜி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத்14 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். மதசார்பற்ற ஜனதா தள எம்எல்சி போஜே கவுடாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ பாரத் ஷெட்டி, கல்புர்கி தொகுதி பாஜக எம்எல்ஏராஜ்குமார் தெல்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந் நிலையில், மேலும் 2 காங். எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிவார்கி தொகுதி எம்எல்ஏ அஜய் சிங், ஹூப்ளி தார்வாட் கிழக்கு தொகுதியை சேர்ந்த பிரசாத் அபய்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் சலீம் கூறி உள்ளார்.
கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்கு 3 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் குயின்ஸ் சாலையில் உள்ள காங். கட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது.  கட்சியின் அலுவலகம் ஒரு கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்திருப்பதால்,  3 ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அலுவலகத்தை மூடிவிட்டோம் என்று சலீம் கூறினார்.