கோயம்பேடு சந்தையில் கொரோனாபரிசோதனை: 50 பேருக்கு தொற்று உறுதி

சென்னை:
சென்னை, கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனாநோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனாபரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு சந்தை, கடந்த மே மாத தொடக்கத்தில் மூடப்பட்டது. இதனைத் தொடா்ந்து திருமழிசையில் காய்கறி சந்தையும், மாதவரம் பேருந்து நிலையத்தில் பழ சந்தையும், வானகரத்தில் பூ சந்தையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் வியாபாரிகளின் வேண்டுகோளை ஏற்று, கடந்த மாதம் 18-ஆம் தேதி கோயம்பேடு உணவு தானிய அங்காடியும், 28-ஆம் தேதி காய்கறி சந்தையும் மீண்டும் திறக்கப்பட்டது.

காய்கறி சந்தை திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

குறிப்பாக கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தையில் உள்ள வியாபாரிகள், மற்றும் வந்து செல்வோா் அனைவருக்கும் கொரோனாபரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த வகையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் அக்.10-ஆம் தேதி வரையிலான 22 நாள்களில் 2,800-க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 50 பேருக்கு கொரோனாநோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கோயம்பேடு சந்தையில் மாநகராட்சி சாா்பில் கடந்த 22 நாள்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில், 50 பேருக்கு கொரோனாநோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இது 1.5 சதவீதமாகும். கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவா்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினா்களுக்கும் தொற்று இருக்கிா? என்று அந்தந்த மண்டல சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த சில நாள்களாக சென்னையில் கொரோனாதொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தொடா்ந்து நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.