சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் இப்போது 64 ஆகக் குறைந்துவிட்டன.

சென்னை மாநகராட்சியில் உள்ள 6 மண்டலங்கள் இந்த பட்டியலில் உள்ளன. அதாவது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்கள் தான் அந்த பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றன.

தண்டையார்பேட்டையில் 24 கட்டுப்பாட்டு மண்டலங்கள், கோடம்பாக்கத்தில் 15 மண்டலங்கள் உள்ளன. இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், அகற்றப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு 14 நாட்களுக்கு எந்த கொரோனா தொற்று பதிவாகவில்லை. எனவே பட்டியலில் இருந்து அகற்றப்பட்டனர்.

புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு தெருவில் ஐந்து முதன்மை கொரோனா தொற்றுகள் அல்லது 20 கொரோனா நோயாளிகள் இருந்தால் மட்டுமே அது சீல் வைக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக, 1050 கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்தன. பின்னர் அது 200 ஆக குறைந்து மீண்டும் 369 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.