சுவிட்சர்லாந்து:
கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் என்று  ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயின் கடுமையான தாக்கத்தால் அடுத்த 2030 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 207 மில்லியன் மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படலாம், இது உலகில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை ஒரு பில்லியனுக்கும் அதிகமாக்க கூடும் என்று ஐநா வளர்ச்சித் திட்டத்தின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
கொரோனா தொற்று நோயின் பல விளைவுகளை ஐநா மதிப்பீடு செய்து வந்த நிலையில், கொரோனா தோற்று நோயின் நீண்ட கால விளைவுகளையும் மதிப்பீடு செய்து வந்தது.
அதன் அடிப்படையில் இந்த தொற்றுநோய் 207 மில்லியன் மக்களை கூடுதலாக வறுமையில் தள்ள கூடுமென்றும், 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்தமாக 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பார்கள் என்றும் ஐநாவின் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய இறப்பு விகிதங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மிக சமீபத்திய வளர்ச்சிக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்ட பேஸ்லைன் கோவிட், அடுத்த 2030 ஆம் ஆண்டுக்குள் 44 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.