கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து முக்கிய நடவடிக்கைகள் குறித்து டிஸ்கவரி ப்ளஸ் சேனலில் COVID-19: India’s War Against The Virus எனும் பெயரில் ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.
பல்வேறு விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் இதில் இடம்பெறவுள்ளனர். இந்த ஆவணப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும், இந்தி பதிப்புக்கு நடிகர் மனோஜ் பாஜ்பாயும் வர்ணனைக் குரல் கொடுக்கவுள்ளனர்.
ஜூலை 16-ம் தேதி இரவு 8 மணிக்கு இந்த ஆவணப்படம் டிஸ்கவரி ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. ஜூலை 20-ம் தேதி இரவு 8 மணிக்கு, டிஸ்கவரி, டிஸ்கவரி வேர்ல்ட் ஹெச்.டி. ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகவுள்ளது.