சென்னை:

க்கள் ஊரடங்கு காரணமாக, சர்ச்சில் நடக்கும் பிரார்த்தனைகள் அனைத்தும் லைவ் ஸ்டீரிமிங்கில் ஒளிபரப்பப்படும் என்று மெட்ராஸ் – மைலாப்பூர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் ஆண்டனி சாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு கடந்த 19-ஆம் தேதி உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, இன்று ஒரு நாள் மட்டும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறும், வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் வலியுறுத்தினாா்.

எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதேவேளையில் தேவையற்ற அச்சத்தை தவிா்க்குமாறும் மக்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். அதேபோல், பதற்றத்தில் மருந்துகள் மற்றும் உணவுப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இதையடுத்து, இன்று, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காட்சியளிக்கிறது. சுகாதரத்துறை, காவல்துறை உள்ளிட்டவையைத் தவிர்த்து பெரும்பாலானோருக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுய ஊடரங்கையடுத்து புதுச்சேரியில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் ஊரடங்கு காரணமாக, சர்ச்சில் நடக்கும் பிரார்த்தனைகள் அனைத்தும் லைவ் ஸ்டீரிமிங்கில் ஒளிபரப்பப்படும் என்று மெட்ராஸ் – மைலாப்பூர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் ஆண்டனி சாமி தெரிவித்துள்ளார்.