நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 77000 பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா: 401 பேர் பலி

டெல்லி: நாடு முழுவதும் 77000 பாதுகாப்பு படை வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது, தெரிய வந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை எட்டியிருக்கிறது. அவர்களில் 50 லட்சம் பேர் இந்த தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா தொற்றால் மக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், ராணுவத்தினர் உள்ளிட்டோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிஆர்பிஎப், பிஎஸ்எப், என்எஸ்ஜி உள்ளிட்ட படைகளை சேர்ந்த 76,768 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 401 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 77000 பேரில், துணை ராணுவத்தினர் 15318 பேரும், மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 5427 பேரும் உள்ளனர்.