கொரோனா எதிரொலி: இந்த ஆண்டு சிலாங்கூரில் தைப்பூச நிகழ்வுகள் ரத்து

சிலாங்கூர்:
கொரோனா எதிரொலி காரணமாக சிலாங்கூரில் இந்த ஆண்டு தைப்பூச நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் இஸ்லாமியரல்லாத மத விவகாரக் குழுவின் இணைத் தலைவர் வி.கணபதிராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், கொரோனா எதிரொலி காரணாமாக தைப்பூச திருவிழா, பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு உதவும் பல திட்டங்களுக்காக செலவிடப்படும் என்றார்.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு பக்தர்கள் எந்தவிதமான தைப்பூச ஊர்வலத்தையும் நடத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு தைப்பூச திருவிழாவை பக்தர்கள் வீட்டில் இருந்து பூஜை செய்து கொள்வது நல்லது என்றும் கொரோனா பரவலை தடுக்க, பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.