பனாஜி:

ந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த சுற்றுலாப்பயணிகள் சுமார் 300 பேர் தனி விமானம் மூலம் ஜெர்மன் தலைநகர்  ஃபிராங்புர்ட் சென்றனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. மேலும் 21 நாள் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கி உள்ளது.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுமார் 300 சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் கோவாவில் சிக்கிக் கொண்டனர். இவர்கள் மத்திய வெளியுறவுத் துறையிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில்,  அவர்களை ஜெர்மனுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

அதைத்தொடர்ந்து இன்று கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் 300 சுற்றுலா பயணிகளும் ஜெர்மனி தலைநகர் ஃபிராங்புர்ட் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.