முன்கூட்டியே முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்! அலுவல் ஆய்வுகுழு முடிவு

டெல்லி:  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க,  அலுவல் ஆய்வு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரத்தின் இடையில் கூட்டத்தொடர் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் 2020-ஆம் ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர்  வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை தொடர்ந்து 18 நாட்கள் நடக்கும் என்றும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ள தாக கூறப்படுகிறது.  அடுத்த வாரம் நிறைவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழல் காரணமாக,   நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அடுத்த வாரம் மத்தியில் கூட்டத்தொடர் முடிவடைய வாய்ப்பு உள்ளதாகவும்  கூறப்படுகிறது.