’சர்காரு வாரி பாட்டா’ படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா….!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

இந்நிலையில், மகேஷ்பாபு – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் ’சர்காரு வாரி பாட்டா’ தெலுங்கு படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.