2021ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் கொரோனா மருந்து கிடைத்து விடும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: 2021ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் கொரோனா மருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா மருந்து து அறிமுகப்படுத்தும் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தயாராகலாம். தடுப்பூசியை தனி நபர்களிடம் சோதனை நடத்துவதில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலும் தடுப்பூசி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதை பற்றி இப்போதைக்கு எந்த விவரங்களையும் வெளியிட முடியாது. 2021ம் ஆண்டு முதல் காலாண்டிற்குள் மருந்து அறிமுகப்படுத்தப்படும். தடுப்பூசி சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

அவசியம் இருப்பின், முதல் சோதனை மருந்தை நானே மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொள்வேன். மக்களின் வாங்கும் திறனை பொருட்படுத்தாமல் அவர்களுக்கு  தடுப்பூசி கிடைக்க செய்ய மத்திய அரசு உறுதி அளிக்கும் என்று கூறினார்.