சுவிட்சர்லாந்து:

லக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெடிராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், உற்பத்தியை கணிசமாக உயர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார், மேலும் உற்பத்தி செய்த தடுப்பூசிகளின் அளவை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதைப் பற்றி பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளதாவது: உலகளவில் தற்போது தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் அளவு ஏற்கனவே தொற்று நோய்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறது, அப்படி இருந்தாலும் கிட்டத்தட்ட 130 நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் இன்னும் தடுப்பூசியை பெறவில்லை, ஆகவே அனைத்து கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன், மேலும் உற்பத்தி செய்த தடுப்பூசியின் அளவை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், ஏனெனில் அனைத்து அரசாங்கங்களுக்கும் தங்கள் சொந்த மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது, என டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.