தேவையற்ற ஊரடங்கு குறித்து நாம் சிந்திக்க வேண்டும்: ராஜீவ் பஜாஜ்

புதுடெல்லி:

ஜாஜ் ஆட்டோ, வாகனத் துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, அதன் உற்பத்தி நடவடிக்கைகளையும் மூடியுள்ளது. ஆனால் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், சூரஜீத் தாஸ் குப்தாவுக்கு அனுப்பிய மின்னஞ்சல் நேர்காணலில், அரசாங்கம் விதித்துள்ள முழுமையான ஊரடங்கு குறித்து தனது முரண்பாடான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இரு சக்கர வாகனங்களுக்கான சிறந்த மற்றும் மோசமான சூழ்நிலைகள் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஊரடங்கு பற்றி உங்கள் கருத்து என்ன?

எட்டு வாரங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான சூழ்நிலையே நிலவுகிறது. இந்த ஊரடங்கு உத்தரவால், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களில் 99.9 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும், ​​94 சதவிகிதத்தினர் 65 வயதுக்கு கீழே உள்ளவர்களிடமும் எந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை.வயதானவர்களை வீட்டிலேயே இருக்க வேண்டுமென்றும், பொது இடங்களை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு தேவை திரும்புவதைப் பார்க்கிறீர்களா? இந்த ஆண்டிற்கான வளர்ச்சியை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள், அது எவ்வளவு பாதிக்கப்படும்?

பற்றாக்குறை 20 ஆண்டுகளில் அதிகமாக இருக்கும்

தொழில் அதன் பணியாளர்களைக் குறைக்க வேண்டுமா? அதன் வர்த்தகத்தை ஒழுங்கமைக்க மற்ற வழிகள் என்ன?

பெரும்பான்மையான தொழிலாளர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்க்ள் இந்த ஊரடங்கைக்கால் பாதிக்கப்படும், பெரிய நிறுவனங்கள் சிறிது காலம் தாக்குபிடிக்கலாம். இந்த தேவையற்ற ஊரடங்கை விரைவில் மறுபரிசீலனை செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

கடுமையான நெருக்கடிகளை சந்திக்கும் உங்கள் விநியோகஸ்தர்கள், சப்ளையர்கள் மற்றும் விநியோக முறையை எவ்வாறு மாற்று வகையில் திட்டமிட்டுள்ளீர்கள்?

அவர்களுக்கு எங்களது ஆதரவை தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை. எங்கள் திறனுக்கு ஏற்றவாறு, வட்டி இல்லாத கடன் கொண்ட விநியோகஸ்தர்கள் மற்றும் பணம் செலுத்தும் சப்ளையர்கள் கொண்டு நெருக்கடியை சமாளிப்பது தான் எங்கள்திட்டம்.

உங்கள் விற்பனையில் பெரும் சதவீதம் வெளிநாட்டிலிருந்து வருவதால், அந்த சந்தைகளும் பாதிக்கப்படும், ஏற்றுமதி சந்தையை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

இந்த தன்னிச்சையான ஊரடங்கு காரணமாக அனைத்து ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு ஒருவர் வியாபாரம் செய்ய வேண்டிய வழியில் உள்ள படிப்பினைகள் என்ன?

காலம் கடந்த ஞானம் இது. இனிமேல் வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும், உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, மந்தை மனநிலையை புறக்கணிப்பது நல்லது. உங்கள் வணிகத்திலும் உங்களிடமும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்ள கற்று கொள்ள வேண்டும்.