கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்: சுகாதார அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந் நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கர்நாடகா சுகாதார அமைச்சர் சுதாகர் கூறி இருப்பதாவது: கர்நாடகாவில் கொரோனா மருந்துக்கும், தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தொற்று அதிகமுள்ள இடங்களை கண்டறிந்து சுகாதாரக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த 80 முதல் 120 நாள்களுக்கு கொரோனா பரவல் இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால் மே இறுதி வரை மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும், இது ஆரம்பம் என்று கூறினார்.