ஒரு மாநி­லத்­தில் இருந்து மற்­றொரு மாநி­லத்­துக்கு தொழி­லா­ளர்­கள் உள்­ளிட்ட பல­ரும் கண்­ட­படி சென்று வரு­வ­தால் கிருமிப் பர­வல் கூடி வருவதாகவும்,  அதே­போல வெளி­நா­டு­களில் இருந்து அழைத்து வரப்­படும் இந்­தி­யர்­களும் தனி இடத்­தில் வைக்­கப்­பட்டு கண்­கா­ணிக்­கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ­மா­தம் 26ஆம் தேதி நில­வரப்­படி இந்­தியா முழு­வ­தும் மொத்­தம் 23 லட்­சம் பேர் தனி­மைப் படுத்­தப்­பட்டு இருப்­ப­தாக மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறினார்.

இதையடுத்து,  கொரோனா தாக்கம்  குறையாத நகரங்களில்  மேலும் இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் 5 வது முறையாக பல்வேறு  தளர்வுகளுடன் நீடிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி, மால்கள், உணவு விடுதிகள், வழிப்பாட்டுத் தளங்கள் உள்பட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள்,  சமூக இடைவெளியுடன், முகக்கவசம், சானிடைசர் உள்பட சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி,  தமிழ்நாட்டில், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள், மகாராஷ்டிராவில்  மும்பை, டில்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா -ஹவுரா, இந்தூர்-மத்தியப் பிரதேசம், ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் – ராஜஸ்தான், ஆகிய 13 நகரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடு, சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது.