சிஎஸ்கே அணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் நாளை நடைபெறவிருந்த சிஎஸ்கே-ஆஆர் போட்டி ஒத்தி வைப்பு…

சென்னை: சிஎஸ்கே அணியினி பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி உள்பட 3 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், சிஎஸ்கே அணி வீரர்களும் தனிமைப்படுத்தப் பட்டுஉள்ளனர். இதனால் நாளை நடைபெற இருந்த சிஎஸ்கே ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் நேற்று நடைபெற இருந்த  ஆர்சிபி-(RCB) யுடன் நடக்க இருந்த போட்டி ரத்தானது. இந்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் மேலாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் அணியின் பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதையடுத்து  சிஎஸ்கே வீரர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நாளை நடைபெற இருந்த த சிஎஸ்கே-ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.