கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல்,  அதிகரித்து வருவதால்,  இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில்  கொரோனா தொற்று மீண்டும்  அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 4812 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை  67, 514 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், மீண்டும் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு முன்னெடுத்து உள்ளது.

இதையடுத்து உத்தரகாண்ட்  மாநில தலைநகரில் வாரந்தோறும் ஞாயிறு அன்று கடையடைப்புக்கும் உத்தரவிட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.  மேலும் டெல்லி உள்ள வெளிமாநிலங்களில் இருந்து டேராடூனுக்கு வருபவர்களுக்கு கோவிட் 19 பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து கூறிய டோராடூன்  மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் கே.ஸ்ரீவத்ஸவ் “மாநிலத்தின் தலைநகராக உள்ள டேராடூன் நகரத்தில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் நகரின் அனைத்து சந்தை இடங்களையும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகளைத் தவிர்த்து, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். இந்த உத்தரவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலாகிறது” என்று தெரிவித்துள்ளார்.