வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மகன் பாரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அவரது தாயார் இவாங்கா டிரம்ப் தெரிவித்து உள்ளார்.


உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று, அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அதன் பாதிப்புக்கு  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி இவாங்கா டிரம்ப் உள்பட லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
அதிபர் டிரம்ப்க்கும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, வெள்ளை மாளிகை திரும்பினார்.
இந்த நிலையில் ட்ரம்பின் மகன் பாரனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாக அவரின் தாய் மெலானியா செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கிறார். தற்போது,  14 வயதான பாரனுக்கு கொரோனா தொற்று இருந்தாலும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்பதால் ஆபத்து ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.