தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ரூ.250 ஆக விலை நிர்ணயம் என தகவல்…!

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா  தடுப்பூசி ரூ.250 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளன. தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இந் நிலையில், தனியார் மருத்துவமனைகளில்  தடுப்பூசியின் விலை எவ்வளவு என்பதை  மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் ஒரு தடுப்பூசியின் விலை ரூ.250 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா தடுப்பூசி மருந்து சேவை வரியான ரூ.100 உடன் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.