பசு ரத்தத்தில் கொரோனா தடுப்பூசி ? விளக்கம் கேட்டு ஜனாதிபதியிடம் இந்து மகா சபை கடிதம்
புதுடெல்லி :
ஆங்கிலேய ஆட்சியில் பசுவின் கொழுப்பால் ஆன துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு இந்து மதத்தை இழிவுபடுத்தியது போல்,
தற்போது பசுவின் ரத்தம், மாமிசம் மற்றும் கொழுப்பை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து என்ற பெயரில் உடலுக்குள் அனுப்பி இந்து மதத்தை அழிக்கும் நோக்கில் சர்வதேச சதி நடைபெறுகிறது, என்று அகில இந்திய இந்து மகா சபை தலைவர் சுவாமி சக்ரபாணி குற்றம்சாட்டியுள்ளார்.
राष्ट्रपति को दिया गया ज्ञापन, करोना के वैक्सीन या दवा भारत में लाने से पहले सरकार या अंतरराष्ट्रीय कंपनियां देश को स्पष्ट करें की वैक्सीन या दवा में गाय का खून अथवा कोई भी ऐसे पदार्थ ना हो जो हिंदू सनातन धर्म की भावना को आहत करता है🌸🙏🌸 स्वामी चक्रपाणि महाराज- pic.twitter.com/UgOj1idLAF
— Swami Chakrapani Maharaj (@SwamyChakrapani) December 27, 2020
இதுகுறித்து இந்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் அதற்கான மனுவை அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முன், அதில் பசு ரத்தம் கலக்கப்பட்டிருக்கிறதா என்பதை அரசும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தெரிவிக்க வேண்டும் என்று தெளிவுபட கூறியிருக்கிறார்.