நாடு முழுவதும் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது: நாட்டு மக்களின் உடல் நலனே பிரதமர் மோடிக்கு முக்கியம். இனி பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப, எப்போது வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும் வகையில், இது வரை இருந்த நேரக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. இனி நாடு முழுவதும் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும். முன்னதாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது, குறிப்பிடத்தக்கது.