திருவனந்தபுரம்:

கொரோனாவில் இருந்து விடுதலையான இத்தாலி நபரை, கேரள அமைச்சர்கள் நினைவுப்பரிசு வழங்கி  அரசு சார்பில் பெங்களூரு அனுப்பி வைத்தனர். அவர் அங்கிருந்து இத்தாலி பயணமாகிறார்.

கொரோ

னா தாக்கம் அதிகரிப்பு காரணமாக நாடு முழுவதும் மே 3ந்தேதிவரை  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் இன்றுமுதல் பல மாநிலங்களில், கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதுபோல கேரளாவிலும் சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கேரளாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரோபர்டோ தனிஷோ ( Roberto Tonizzo,) என்ற நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, கேரளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவருக்கு நோய் குணமானதையடுத்து, அவரது  சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நோக்கில், கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட சில அமைச்சர்கள் அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி, அரசு சார்பில் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.  அவர் பெங்களூருவில் இருந்து இத்தாலி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரேஒரு இத்தாலி நபரை சொந்த நாட்டுக்கு அனுப்ப அமைச்சர்களே நேரில் வந்து நினைவுப்பரிசு வழங்கிய நிகழ்வு விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது… எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் என்று சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..