தமிழகத்தில் கொரோனா வைரஸ் அரசு பரிசோதனை கூடங்கள் 8 ஆக உயர்வு…

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று ஆய்வு செய்தற்கான ஆய்வகங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

ஏற்கனவே தமிழக்ததில் 7 அரசு மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 8வதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா பரிசோதனை கூடங்களும் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதுவரை 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மேலும் ஏராளமானோர் தனிமைப்படுத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா சோதனை ஆய்வங்களுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பரிசோதனைக் கூடங்கள்:

1) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, சென்னை 

2) கிஙஸ் இன்ஸ்டிடியூட், கிண்டி, சென்னை

3) சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம்

4) கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர்

5) திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருவாரூர்

6) தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தேனி

7) திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி

8) அரசு இராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மதுரை.

இதுதவிர, தமிழகத்தில் இதுவரை  8 தனியார் ஆய்வங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சளி போன்றவை குறித்த சோதனை முடிவுகள்  விரைவில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.